கிறிஸ்து பிறப்பு இன்று

353 0

birth-of-jesus-christ_secvpfயேசு கிறிஸ்து பிறப்பை கொண்டாடும் புனித நத்தார் தின கொண்டாட்டங்கள் நேற்று நள்ளிரவு முதல் ஆரம்பமாகியுள்ளன.

உலக வாழ் கிறிஸ்தவர்கள் இன்றைய தினம் நத்தார் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த விழாவானது கிறித்தவத் திருவழிபாட்டு ஆண்டில் திருவருகைக் காலத்தினை முடிவு பெறச்செய்து, பன்னிரண்டு நாட்கள் கொண்டாடப்படும் கிறித்து பிறப்புக் காலத்தின் ஆரம்ப நாளாகும்.

இந்த கொண்டாட்டங்களில் திருப்பலி, குடில்கள், கிறித்துமசு தாத்தா, வாழ்த்து அட்டைகளையும் பரிசுகளையும் பரிமாறல், கிறித்துமசு மரத்தை அழகூட்டல், கிறித்துமஸ் மகிழ்ச்சிப் பாடல், சிறப்பு விருந்து என்பன பொதுவாக உள்ளடங்கும்.

கிறித்து பிறப்புவிழா கிறித்தவர்களின் ஒரு முக்கியமான திருநாளாகும்.

இது பெரும்பாலான கிறித்தவர்களால் டிசம்பர் 25ஆம் திகதி கொண்டாடப்படுகிறது.

எனினும் கிழக்கு மரபுவழி திருச்சபைகள் இதனை யூலியின் நாட்காட்டியில் டிசம்பர் 25ஐக் குறிக்கும் நாளான ஜனவரி 7ஆம் நாள் கொண்டாடுகின்றன.

இதனிடையே, இந்த முறை நத்தார் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் மூன்று இடங்களில் பிரதான சமய வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் தலைமையில் கந்தானை புனித செபஸ்டியன் தேவாலயத்திலும், கொட்டாஞ்சேனை புனித லூசியாஸ் தேவாலயத்திலும், ஜா எல புனித ஜோசப் தேவாலயத்திலும் இந்த பிரதான வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

கிறிஸ்மஸ் அல்லது கிறித்து பிறப்புப் பெருவிழா வருடந்தோறும் இயேசு கிறித்துவின் பிறப்பைக் குறிக்கும் விதத்தில் கொண்டாடப்படும் விழாவாகும்.