போலி சாரதி அனுமதிப்பத்தித்துடன் ஒருவர் கைது

358 0

586535574arrestகந்தபொல, மாகஸ்தொட்ட பிரதேசத்தில் போலியாக தயாரிக்கப்பட்ட வாகன சாரதி அனுமதிப்பத்திரத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அவரிடமிருந்து 05 போலி வாகன சாரதி அனுமதிப்பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பலருக்கு இதுபோன்று போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் இவர் செய்து கொடுத்திருப்பதாகவும், சந்தேகநபர் பேலியகொடை விஷேட குற்றப் பிரிவினரால் தேடப்பட்டு வந்த ஒருவர் என்றும் விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நுவரெலியா, மாஸ்தொட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்தபொல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.