சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை

311 0

1934342543factஉரிய தரம் மற்றும் சரியான பராமரிப்பு பேணப்படாமல், சூழல் மாசடையும் விதமாக வாயு வெளியேற்றும் தொழிற்சாலைகளுக்கு எதிராக இனிவரும் காலங்களில் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

வெளியேற்றப்படும் வாயு தொடர்பான தரம் மற்றும் அளவு சம்பந்தமாக அனைத்து தொழிற்சாலைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக அந்த அதிகாரசபையின் சூழல் பாதுகாப்பு கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்ணாயக்க கூறினார்.

அத்துடன் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் அதிகாரிகளால் நாடு பூராகவும் உள்ள தொழிற்சாலைகள் மேற்பார்வை செய்யப்படுவதாக அவர் கூறினார்.

இவைதவிர சூழலுக்கு பாதகமான ஒலிகளை எழுப்புதல், ஒழுங்கற்ற நீர் பயன்பாடு, ஆபத்துக்களை ஏற்படுத்தும் கழிவுகளை சுற்றாடலுக்கு வெளியேற்றல் போன்றவற்றில் ஈடுபடும் தொழிற்சாலைகள் சம்பந்தமாக கடுமையான சட்டநடவடிக்கை எடுப்பதாக பிரதிப் பணிப்பாளர் நாயகம் சஞ்சய ரத்ணாயக்க கூறினார்.