மறைந்த தமிழக முதலமைச்சருக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வுகள்-(காணொளி)

300 0

vavuniyaமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வு, தமிழருவி மேழிக்குமரன் தலைமையில் வவுனியா நகரசபை மண்டபத்தில்இடம்பெற்றது.

ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,

வட மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன், அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் ஆகியோர் மலரஞ்சலி செலுத்தியதையடுத்து நிகழ்வுகள் ஆரம்பமாகின.நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன்,தமிழ் தேசிய இனப்பிரச்சனைக்கான தீர்வானது வடக்கு கிழக்கு இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் இணைக்கப்படவேண்டும். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற கோசத்தின் அடிப்படையில் தான் தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்திருந்தனர். ஆனால் சுமந்திரன் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

ஆகவே சமஸ்டி எப்படி சாத்தியமாக முடியும்;? ஆகவே எவ்வாறான தீர்வை நோக்கி போகப்போகிறோம்? ஒரு சில தமிழ் தலைவர்கள் நாங்கள் எங்கள்உரிமையை விட்டுக்கொடுக்கமாட்டோம் என கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தமிழ் மக்களின் உரிமை குறித்து அரசாங்கத்துடன் எந்தவிதமான பேச்சுவார்த்தையிலும் ஈடுபடவில்லை என்று குறிப்பிட்டார்