இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் – நிலாந்தன் (காணொளி)

256 0

nilanthanமறைந்த தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு வவுனியாவில் அஞ்சலி நிகழ்வொன்று இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் உரையாற்றிய ஊடகவியலாளரும், அரசியல் ஆய்வாளருமாகிய நிலாந்தன்,

இன்னும் இரண்டு கிழமைகளில் ஒரு திருப்புமுனையை நோக்கி தமிழ் அரசியல் வந்தடையப்போகிறது. உங்கள் எதிர்காலத்தையும் உங்கள் சந்ததியினரின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கப்போகும் முடிவுகளை எடுக்க வேண்டிய மக்களாக வரும் ஆண்டு அமையபோகிறது. சிலசமயம் வரும் ஆண்டு தமிழ் மக்களை பொறுத்தவகையில் தேர்தல் ஆண்டாகவே அமைந்துவிடலாம். ஒன்றுக்கு மேற்பட்ட தேர்தல்களை முகங்கொடுக்க வேண்டிய நிலைமை காணப்படலாம். நீங்கள் உங்கள் சந்ததியினரையும் சித்தித்து முடிவெடுக்க வேண்டிய ஆண்டாக எதிர்வரும் ஆண்டு அமையப்போகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் தன்னிடம் தெரிவிக்கும் போது வடக்கு கிழக்கு பிரிக்கப்படாத விதத்தில் ஒரு தீர்வு வருவதை நீங்கள் உறுதிப்படுத்தவேண்டும் என சம்பந்தன் அவர்கள் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும், அதற்கு இலங்கை அரசுமீது இந்தியா அழுத்தத்தைபிரயோகிக்க வேண்டும் என கோரியிருப்பதாகவும், அதற்கு இன்னும் இரண்டு கிழமைகளில் பதில் தெரிந்துவிடும் என்றும் தெரிவித்தார்.