29-வது நினைவு தினம்: எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி

342 0

201612241229148615_o-panneerselvam-tribute-mgr-memorial-place_secvpfமறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் 29-வது ஆண்டு நினைவு நாள் இன்று கடைபிடிக்கப்பட்டது. நினைவு நாளையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அ.தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதற்காக நினைவிடம் முன்பு பந்தல் அமைக்கப்பட்டு இருந்தது. தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்து இருந்தனர்.முதல்- அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் காலை 10.30 மணி அளவில் எம்.ஜி.ஆர். நினைவிடத்துக்கு வந்தார். நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து எம்ஜி.ஆர். நினைவிடத்தில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.நிகழ்ச்சியில் அவைத் தலைவர் மதுசூதனன், பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, செம்மலை, தலைமை நிலைய நிர்வாகிகள் பொன்னையன், பண்ருட்டி ராமச்சந்திரன், செங்கோட்டையன், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆர்.வைத்திலிங்கம், எஸ்.ஆர்.விஜய குமார் மற்றும் பா.வளர்மதி, தமிழ்மகன் உசேன், தளவாய் சுந்தரம், சைதை துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் பாலகங்கா, வெற்றிவேல், கலைராஜன், வி.என்.ரவி, எம்.எல்.ஏ.க்கள் உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

எம்.ஜி.ஆர். நினைவு நாள் என்பதால் மெரினா கடற்கரை முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.இன்று வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. நினைவிடத்துக்கு வந்தவர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.