ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியளித்துள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திருப்பூரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க சென்ற முதல்- அமைச்சர் பன்னீர்செல்வம் இதுபற்றி பேசாதது வருத்தம் அளிக்கிறது.தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் இருக்கும் போதே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இதற்கு தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும்.
முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் வீட்டில் பணம்- நகைகளை வருமான வரித்துறையினர் கைப்பற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இதில் ராம மோகனராவுடன் தொடர்பில் இருந்தவர்கள் மீதும் வருமான வரித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக திருப்பூரில் பெரியார் நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு ஜி.ராம கிருஷ்ணன் மாலை அணிவித்தார்.

