அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சிறீலங்கா கடற்படையினரைத் தவிர வேறெந்த கடற்படையினரும் பயன்படுத்துவதற்கு அனுமதிக்கமுடியாது என சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தின் 80 வீதமான உரிமைகளை சீன நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டுள்ளமையால் சீனாவின் கடற்படையினர் அத்துறைமுகத்தைப் பயன்படுத்தக்கூடுமென செய்திகள் வெளியாகியிருந்தன.
இதுகுறித்து கருத்து வெளியிட்ட அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அம்பாந்தோட்டைத் துறைமுகமானது வர்த்தக நடவடிக்கைக்காக மாத்திரமே பயன்படுத்தப்படும். இந்த நடைமுறை கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும்.
சிறீலங்காக் கடற்படையினரைத் தவிர வேறெந்தக் கடற்படையினரையும் அனுமதிக்கமுடியாது.
அத்துடன் துறைமுக பாதுகாப்புக்கு சிறீலங்கா கற்படை, காவல்துறை, துறைமுக அதிகாரசபையே பாதுகாப்புக்காக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

