நல்லிணக்கத்திற்கான ஒத்துழைப்பை கிறிஸ்தவ சமூகம் வழங்கும் : மெல்கம் ரஞ்சித் ஆண்டகை!

336 0

dcp0253நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிறிஸ்தவ சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்கும் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.நீர்கொழும்பில் நடைபெற்ற தேசிய நத்தார் விழாவில் நேற்று(22) பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இனங்களுக்கு இடையில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முன்னெடுக்கப்படும் முனைப்புக்களுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் பூரண ஒத்துழைப்பு உண்டு.இலங்கையில் பல இன மக்களும் பல மத மக்களும் வாழ்ந்து வருவதனால் அனைத்து சமூகங்களுக்கு இடையிலும் சமாதானத்தை உருவாக்க வேண்டிய பாரிய சவாலை ஜனாதிபதி எதிர்நோக்கி உள்ளார்.

இந்த சவாலை வெற்றிக் கொள்ளும் முனைப்புக்களுக்கு கிறிஸ்தவ சமூகத்தின் பூரண ஒத்துழைப்பும் ஆதரவும் எப்போதும் உண்டு எனத் தெரிவித்தார்.