அரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது!

218 0

rice-detoxஅரிசிக்கான தட்டுப்பாடு செயற்கையானது என விவசாய பணிப்பாளர் நாயகம் கலாநிதி ரொஹான் விஜயகோன் தெரிவித்துள்ளார்.நாட்டில் நிலவி வரும் அரிசிக்கான தட்டுப்பாடு குறித்து அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த இரண்டு போகங்களினதும் போது ஏழு மெற்றிக்தொன் நெல் விளைச்சல் காணப்பட்டது.இந்த நெல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் வரையில் போதுமானதாகும். பாரிய அரிசி வர்த்தகர்கள் அரிசியை பதுக்கி வைத்துக் கொண்டு செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் தட்டுப்பாடு இன்றி அரிசியை நுகர்வதற்கு எட்டு இலட்சம் ஹெக்ரயரில் நெல் செய்கை செய்ய வேண்டும் என்ற போதிலும், தற்பொது இரண்டரை லட்சம் ஹெக்ரயரில் நெல் செய்கை பண்ணப்படுகின்றது.உயர் தொழில்நுட்பம் கூடுதல் விளைச்சல் தரக்கூடிய நெல் விதைகளை பயிரிடுதல் போன்ற காரணிகளினால் அதிகளவு விளைச்சல் கிடைத்துள்ளது.

எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டால் எதிர்வரும் 2017 ஜூன் மாதம் வரையில் தட்டுப்பாடு இன்றி அரிசி வழங்க முடியும்.தொடர்ச்சியாக வறட்சி ஏற்பட்டால் மட்டும் நெற் செய்கைக்கு பாதிப்பு ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.