என்றும் வலி சுமந்த தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்கைம் (Germay Mannheim)

833 0

உலைகத் தமிழர்களின் மனங்களில் ஆறாத வடுவாகவும் வலியாகவும் உள்ள தமிழின அழிப்பு நாளின் 12ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு மன்ககைம் பராடபிலட் (Mannheim Paradeplatz) என்ற இடத்தில் 15:40 மணிக்குபொதுச்சுடர் ஏற்றலுடன் எழுச்சிப்பூர்வமாக ஆரம்பமானது. பொதுச்சுடரினை தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியேற்றி வைக்கப்பட்டு சுடரேற்றல், மலர்வணக்கம் மற்றும் அகவணக்கம் ஆரம்ப நிகழ்வாக இடம்பெற்றது.

இன்று (18.05.2021) நிகழ்ந்த தமிழின அழிப்பு நினைவு நிகழ்வில் யேர்மன் மொழியில் உரைகளும், தமிழ்மொழியில் உரையும், வாழிட மொழியில் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் தமிழர்களின் வலியை வேற்றின மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் கண்காட்சி படுத்தலும் யேர்மன் தமிழ் இளையோர்
அமைப்பினரால் தமிழின அழிப்பை வௌிப்படுத்தும் ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டது.

நிகழ்வில் தமிழ் மக்களுக்கும் வேற்றினமக்களுக்கும் முள்ளிவாய்கால் வலியை உணர்ந்தும் வகையில் கஞ்சி கொடுக்கப்பட்டது. இறுதியாக 17:45 மணிக்கு தமிழீழ தேசியக்கொடிஇறக்கப்பட்டு „நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்“ பாடல் ஒலிக்கப்படவிட்டு „தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்“ என்ற முழக்கத்துடன் 12ஆம் ஆண்டு தமிழின அழிப்பு நினைவு நாளின் நிகழ்வு நிறைவுப்பெற்றது.