ஓமந்தையில் அதிகாலை வீடு புகுந்து திருடர்கள் கைவரிசை

402 0

thief-06வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச் சென்றனர்.

வவுனியா – ஓமந்தை அரச ஊழியர் வசிக்கும் வீட்டுத் திட்ட பகுதியில் இன்று அதிகாலை வீடு புகுந்த திருடர்கள் பணம், நகை என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.

வவுனியா, ஒமந்தை, அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் அவர்களது வீட்டில் இருந்த பணப்பையை எடுத்து அதிலிருந்த பணம் மற்றும் சாமி அறையிலுள்ள அலுமாரியினைத் திறந்து பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த நகை, 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை திருடிச்சென்றுள்ளனர்.

உறக்கத்தில் இருந்த வீட்டு உரிமையாளரின் மனைவி அதிகாலை 2.30 மணியளவில் தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து சென்ற போது வீட்டில் திருட்டு இடம்பெற்றது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து ஓமந்தைப் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.