யாழ்ப்பாண கடற்றொழில் திணைக்களத்திற்கு இரண்டு மாடி கட்டடம் அமைப்பதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர அடுத்த ஆண்டு நிதி ஒதுக்குவதற்கு சம்மதித்துள்ளதாக யாழ்ப்பாண கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நேற்றையதினம் கடற்றொழில் அமைச்சரை கொழும்பில் அவருடைய அலவலகத்தில் சந்தித்த பின் இன்று மாலை ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் புதிய வாகனம் ஒன்றை வழங்குவதற்கு கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர கொள்கையளவில் இணங்கியுள்ளார் என யாழ்ப்பாண கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனத் தலைவர் நாகநாதி பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

