கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலகத்தின் புதிய கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை சர்வமத பிரார்த்தனையை தொடர்ந்து புதிய அலுவலக கட்டடம் நாடாவெட்டி திறந்து வைக்கப்பட்டதோடு, நினைவுப் பெயர் கல்வெட்டினை மாவை சேனாதிராஜா திரை நீக்கம் செய்து வைத்தார்.
தொடர்ந்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேயவர்த்தன, பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா ஆகியோர் இணைந்து புதிய பிரதேச செயலக கட்டடத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தனர்.
பூநகரி வாடியடிச் சந்தியில் அமைந்துள்ள புதிய பிரதேச செயலக கட்டடம் என்ரிப் திட்டத்தின் 14 மில்லியன் ரூபாவிலும், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் 60 மில்லியன் ரூபாவிலும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட மேலதிக அரச அதிபர் சத்தியசீலன், பூநகரி, கரைச்சி, கண்டாவளை, பளை பிரதேச செயலாளர்கள், சர்வமத குருமார்கள், அரச உத்தியோகத்தர்கள், கிளிநொச்சி மாவட்டத்தின் முப்படைகளின் தளபதிகள் பொலிஸ் அதிகாரிகள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

