ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம்- ஐங்கரநேசன்

395 0

images-1வடக்கு மாகாண விவசாய அமைச்சில் ஆளணிப்பற்றாக்குறை நிலவுகின்ற போதும் கடின முயற்சின் மூலம் தமது அமைச்சு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் 2017ஆம் ஆண்டுக்கான தனது விவசாய அமைச்சின் வரவு செலவுத்திட்ட விவாதத்தின்போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

விவசாய போதனா ஆசிரியர்கள் 58 பேர் பற்றாக்குறையாக உள்ளதாகவும், 140 தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் 30 பேர் மாத்திரம் கடமையில் உள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண சபையில் காணப்படும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்வதற்கு கல்விப் பொதுத்தராதர உயர்தர விஞ்ஞானப் பிரிவில் மூன்று பாடங்களும் சித்தியடைந்தவர்களை உள்வாங்கி விவசாய கல்லூரிகளுக்கு பயிற்சிக்கு அனுப்பியுள்ளோம் என்றும் குறிப்பிட்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர், இவ்வாறு அனுப்பப்பட்டவர்களுக்கு ஜனவரியிலிருந்து நியமனம் வழங்கவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.