இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும்- வெளிவிவகார அமைச்சு

346 0

download-2வெளிநாடுகளிலுள்ள இலங்கை தூதுவர்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற சில சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

ரஷ்ய தூதுவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னர் இந்த விடயம் குறித்து தாம் அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அமைச்சின் பேச்சாளர் மஹேஷினி கொலன்னே தெரிவித்துள்ளார்.

அத்துடன், மலேசியாவிற்கான இலங்கை தூதுவர் மீது தாக்குதல் நடாத்தப்பட்ட சம்பவத்தை அடுத்து அவரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தாம் அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்திருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது காணப்படுகின்ற நிலைமையின் கீழ் வேறு நாடுகளில் உள்ள இலங்கை தூதுவர்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.