மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)

370 0

mannar-prosted-21-12-2016-2மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.மன்னார் கடற்றொழில் திணைக்களத்திற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பனங்கட்டிகொட்டு மீனவர் கூட்டுறவு சங்க மீனவர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்றைய தினம் முன்னெடுத்திருந்தனர்.

மன்னார் தென் கடல் பகுதியில் பட்டிவலைகளை பயன்படுத்தி மீன்பிடிப்பதற்கு கடற்றொழில் திணைக்களம் தொடர்ந்தும் இடையூறுகளை ஏற்படுத்துவதாகவும் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் இலஞ்ச ஊழலில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துமே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னாரின் தெற்கு கடற்பகுதியில் மீன்பிடிப்பதற்கென பயன்படுத்தும் பட்டி வலைகளை அகற்றும் மன்னார் நீரியல் வளத் திணைக்களத்தின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே மன்னார் பிரதான வீதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

போரட்டத்தில் 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வீதிகளில் இறங்கி பேரூந்துகளை மறித்தும் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டனர்.

இதனால் அதிக அளவில் பொலிஸ் உத்தியோக்கத்தர்கள் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட இடத்திற்கு வரழைக்கப்பட்டிருந்ததுடன், பல மணிநேரம் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது.

மன்னாரின் தென் பிராந்திய கடற்பரப்பில் தொடர்ச்சியாக பட்டிவலைகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் தமது வாழ்வாதாரத்தை சிதைக்கும் வகையில் நீரியல் வளத் திணைக்களம் செயற்படுவதாக பனங்கட்டிகொட்டு மீனவர் சங்க பிரிவிற்கு உட்பட்ட பிரதேச மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பட்டிவலை மீன்பிடி தொடர்பில் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில் பவளப்பாறைகள் மற்றும் படகுகளுக்கு சேதம் ஏற்படாதவாறு கட்டுவலை மீன்பிடிக்கு ஏற்ற கடற்பரப்பை அடையாளப் படுத்தி கொடுக்குமாறு நீரியல் வளத் திணைக்களத்திற்கு கூறப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் நீண்டகாலமாக இந்த அடையாளப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிடும் பனங்கட்டிகொட்டு பிரதேச மீனவர்கள், முன்னர் கம்பிகளை பயன்படுத்தி, கட்டுவலை மீன்பிடியில் ஈடுபட்ட போதிலும் தற்போது ரொஜிஃபோமினால் உருவாக்கப்பட்ட காவிகளைப் பயன்படுத்தியே கட்டுவலை மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த மீன்பிடி முறையானது பளப்பாறைகளுக்கோ படகுகளுக்கோ சேதத்தை ஏற்படுத்தாது எனவும் மீனவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மீனவர்களின் இந்த போரட்டமானது மன்னார் பொலிஸ் உத்தியோகத்தர்களின் தலையீடு காரணமாக சுமூகமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
mannar-prosted-21-12-2016-2 mannar-prosted-21-12-2016-3 mannar-prosted-21-12-2016-1