தென்னிந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கப்பல் ஒன்றின் மூலம் நாட்டுக்குள் வந்த இலங்கை பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் கடற்படையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்துள்ளதாக கடற்படை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் ஒரு பெண் தனது குழந்தையுடன் புத்தளம் – வேப்பமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார் எனவும் குறிப்பிபட்பட்டுள்ளது.
நாட்டுக்குள் வந்த மற்றைய பெண் நீர்கொழும்பு பகுதியில் வைத்து நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனையடுத்து,இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

