கனடாவில் காணாமல் போன தமிழ் சிறுமி!

52 0

கனடாவில் 16 வயதான தமிழ் சிறுமி காணாமல் போயுள்ளார். இது தொடர்பான தகவலை புகைப்படத்துடன் ரொறன்ரோ பொலிசார் தமது ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி தரணிதா ஹரிதரன் என்ற 16 வயது சிறுமி 29ஆம் திகதி மதியம் 1 மணிக்கு காணாமல் போயிருக்கிறார்.

அவர் தப்ஸ்கோட் சாலை மற்றும் மெக்லிவன் அவென்யூ பகுதியில் கடைசியாக காணப்பட்டார்.

தரணிதா ஒல்லியான உடல்வாகு கொண்டவர் எனவும் 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இடது கையில் டாட்டூ குத்தியிருக்கும் தரணிதா காணாமல் போன போது அணிந்திருந்த உடைகள் குறித்தும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பிந்திய செய்தி.

ரொறன்ரோ, McLevin Avenue பகுதியில் இருந்து காணாமல்போயிருந்த தரணிதா ஹரிதரன் என்ற 16 வயதுச் சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிசார் தெரிவித்துள்ளனர். இவர் நேற்று முன்தினம் பிற்பகல் 1 மணியளவில் காணாமல் போயிருந்தார் என்றும், அவரைக் கண்டுபிடிக்க உதவுமாறும் ரொறன்ரோ பொலிசார் அறிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று குறித்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் என்று ரொறன்ரோ பொலிஸ் தெரிவித்துள்ளது.