விண்கற்கள் பொழிவு இலங்கை மக்களும் கண்டுகளிக்கலாம்!

263 0

cid__largeஒவ்வொரு வருடத்தின் இறுதியிலும் விண்கற்கள் விழுவது இயல்பு. அந்த வகையில் இந்த வருடம் இதுவரை இல்லாத அளவிற்கு விண்கற்கள் பொழிவு நிகழும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அர்சிட் எனப்படும் விண்கற்கள் 21ஆம் திகதி இரவு அல்லது 22 ஆம் திகதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன் இருண்ட வானில் தீப்பந்துகள் போல காட்சியளிக்கும் என நாஸா ஆராய்ச்சியாளர் ராபர்ட் லன்ஸ்பர்ட் கூறியுள்ளார். இதனை தொலைநோக்கி இல்லாது வெறும் கண்ணால் பார்க்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அர்சிட் விண்கற்கள் 1790 ஆம் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 20-30 நிமிடங்கள் வானில் பிரகாசமாக தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை மக்களும் வருடத்தின் இறுதியில் இந்த விண்கற்கள் பொழிவினை காண முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.