தபால் ஊழியர்களின் பணி பகிஸ்கரிப்பால் வயோதிபர்கள் மற்றும் மாணவர்கள் பெரிதும் பாதிப்பு(காணொளி)

317 0

jasffna-postநாடு முழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் 14 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கடந்த 10 வருடங்களாகத் தபால் திணைக்களத்தில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுமாறு வலியுறுத்தி 2 நாட்கள் பணியை புறக்கணித்துள்ளனர்.

பணிப்புறக்கணிப்பால் பிரதான தபால் நிலையம் பூட்டப்பட்டுள்ள நிலையில் ஏனைய உபதபால் நிலையங்களும் பூட்டி தபால் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.தபால்ஊழியர்களின் தொழிற்சங்க போராட்டம் காரணமாக சமூகசேவை அமைச்சால் வழங்கப்படும் முதியோருக்கான கொடுப்பனவை இன்றையதினம் பெறமுடியாது தூரபிரதேசங்களில் இருந்து வருகைதந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

பலர் இந்நிதியினை கொண்டே தமக்கு மருந்துகளை பெறவேண்டி இருப்பதாகவும் இன்றையதினம்
வேலைநிறுத்தம் காரணமாக தமது மருந்துகளை கொள்வனவு செய்யமுடியாது இருப்பதாகவும்
குரங்குமலை, எபோட்ஸிலி, செனன் போன்ற தூரஇடங்களில் இருந்து வருகைதந்தும் இன்று பெறமுடியாது போனதாக இவர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை இன்றையதினம் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும்தினமாக இருப்பதால் சம்பளப்பட்டியல் பாடசாலைகளுக்கு செல்லாததன் காரணமாக அதிபர்கள் பெரும்நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொழிற்சங்க கோரிக்கைகளுக்கு 14 நாட்களுக்குள் அரசு தீர்வை பெற்றுக்கொடுக்காவிட்டால் தொடர்வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாகவும் தபால் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.