லசந்த விக்ரமதுங்கவிற்கும், மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது(குரல் பதிவு)

272 0

sundayசன்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவிற்கும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் குரல் பதிவொன்று தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

லசந்த விக்ரமதுங்க 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி கொலை செய்யப்பட்டிருந்தார். அவர் கொலை செய்யப்பட்டு 8 வருடங்களின் பின்னர் இவ்வாறான குரல் பதிவொன்று வெளியாகியுள்ளமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

தான் ஒரு வாரத்திற்கு முன்னர் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு சென்றதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறுகின்ற விதத்தில் இந்த குரல் பதிவில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்கு 2008ஆம் ஆண்டு மே மாதமே சென்றிருந்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் 2008ஆம் ஆண்டு மே மாதம் 14ஆம் திகதி உரை நிகழ்த்தியிருந்தார். இந்த தகவல்களின் பிரகாரம், குறித்த உரையாடல் 2008ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்றுள்ளதாக சிலர் தெரிவித்துள்ளனர்.