ஐரோப்பாவிற்கு வரும் குடியேறிகள் எண்ணிக்கையில் வீழ்ச்சி

234 0

refugee_reuters_25_2537707fஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறிகள் மற்றும் அகதிகளாக வருபவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பபட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய எல்லை கட்டுப்பாட்டு முகவரமைப்பு இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.

2016ஆம் ஆண்டில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் குடியேறிகள் மற்றும் அகதிகள் ஐரோப்பாவில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், 2015 ஆம் ஆண்டு சுமார் 10 லட்சம் குடியேறிகள் மற்றும் அகதிகள் ஐரோப்பிய நாடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2016ஆம் ஆண்டில் குடியேறிகள் மற்றும் அகதிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய எல்லை கட்டுப்பாட்டு முகவரமைப்பு தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டில் துருக்கி மற்றும் கிழக்கு மத்தியதரை கடல் மார்க்கமாக சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர்.

அத்துடன், மத்திய மத்தியதரைகடல் மார்க்கமாக ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர் லிபியா மற்றம் எகிப்திலிருந்து தஞ்சமடைந்துள்ளனர்.

குடியேறிகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றித்துக்கும் துருக்கிக்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய ஐரோப்பாவுக்கு கிழக்குப் பகுதியிலிருந்து தஞ்சமடைபவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

ஆனால், வடக்கு ஆபிரிக்காவிலிருந்து இடம்பெயர்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2016 ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் 7 ஆயிரத்து 189 குடியேறிகள் மற்றும் அகதிகள் மரணித்துள்ளதாக குடியேறிகள் தொடர்பான சர்வதேச அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.