தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம்

249 0

downloadயாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றிய தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் ஒன்றில் கடந்த 12ஆம் திகதி வாள்கள் மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டள்ளார்.

குறித்த வாகன திருத்தக உரிமையாளருக்கும் குறித்த பொலிஸ் உத்தியோகத்தருக்குமிடையிலான தனிப்பட்ட குரோதம் காரணமாக வாகன திருத்தகத்திற்குள் வாள்களை வேறொருவர் மூலம் மறைத்து வைத்த பின்னர் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் 119 மூலம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதனையடுத்து அச்சுவேலி பொலிஸார் புத்தூர் சுன்னாகம் வீதியில் அமைந்துள்ள வாகன திருத்தகம் சோதனையிடப்பட்டு வாள்கள் கைப்பற்றப்பட்ட பின்பு வாகன திருத்தக உரிமையாளரும், வாள்கள் தயாரித்தவரும் விசாரணையின் பின்னர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் விசாரணையின் பின்னர் குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

மயூரன் என்ற தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரே மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாள்கள் தயாரித்த இளைஞர் ஒருவர் தற்போத மல்லாக நீதிமன்றத்தினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தரை அடுத்த தவணையில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டள்ளதாக அறியமுடிகிறது.