இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ம் திகதி சென்னை விஜயம் செய்ய உள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வியாழக்கிழமை திருப்பதியில் சாமி தரிசனம் செய்யவதற்காக பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ள உள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ரேணிகுண்டா விமான நிலையம் சென்று அங்கிருந்து காரில் திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசிக்க உள்ளார்.
தரிசனம் முடிந்த அன்றைய தினமே பிரதமர் மீண்டும் நாடு திரும் உள்ளதாகவும் அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

