பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அரசியல் யாப்பு சபை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளஆலோசனை அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி விரைவில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசியல் யாப்பு சபை அண்மையில் கூடியபோது, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் அவரின் பதவிக்கு பொருத்தம் அற்றதாக காணப்படுவதால், நியமனம் வழங்கியவர் என்ற ரீதியில் ஜனாதிபதி அவர் தொடர்பில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வது சிறந்தது என ஆலோசனைஅறிக்கை வழங்கியுள்ளது.
குறித்த ஆலோசனையை தொடர்ந்து, அது தொடர்பில் சட்டம் தொடர்பான ஆலோசனைகளை பெற்றதன் பின்னர் பொருத்தமான தீர்மானம் ஒன்றை ஜனாதிபதி மேற்கொள்வார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

