அரசாங்கத்தின் கொள்கை, தெற்கில் பயங்கரவாதம் என்பதுதான் –மஹிந்த

327 0

mahinthaவடக்கு, கிழக்கிலிருந்து இராணுவ முகாம்களை நீக்கும் இந்த அரசாங்கம், தெற்கில் இராணுவ முகாம்களை நிறுவி,அரச சொத்துக்களை தனியார்மயப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்களை அடக்க முயற்சிக்கின்றது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குற்றம்சாட்டியுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பொது மக்கள் பசி பட்டினிக்கு எதிராகவும், அரச சொத்துக்களை விற்பனை செய்வதற்கு எதிராகவும் கிளர்ந்தெழுவதை அடக்குவதற்கு அரசாங்கம் இராணுவ முகாம்களை அமைத்து வருகின்றது.இராணுவ முகாம்கள் பயங்கரவாதிகளும், பிரிவினைவாதிகளும் உள்ள இடங்களில்தான் அமைக்கப்பட வேண்டும். அரச சொத்துக்களை தனியாருக்கு விற்பனை செய்யும் பாரிய நடவடிக்கையொன்றில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது எனவும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.