தபால் பணியாளர்கள் போராட்டம்

369 0

post_logo1-415x260இன்று நள்ளிரவு முதல் தபால் பணியாளர்கள் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமது கோரிக்கைகளுக்கு உரிய பதிலளிக்கப்படாத காரணத்தினால் திட்டமிட்டவாறு இன்று நள்ளிரவு முதல் தொழிற்சங்கப் போராட்டம் நடத்தப்படும் என தபால் தொழிற்சங்கங்களின் ஒன்றிய அழைப்பாளர் சின்தக பண்டார தெரிவித்துள்ளார்.

இதன்படி இன்று நள்ளிரவு முதல் தபால் அலுவலகங்கள் அனைத்தும் எதிர்வரும் 48 மணித்தியாலங்களுக்கு மூடப்பட்டிருக்கும்.

தபால் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹாலீமுடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த காரணத்தினால் போராட்டம் நடத்தப்பட உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.