பிரான்ஸ் பரிஸ் நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியிடப்பட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள போதிலும், காயமடைந்த இருவரின் நிலையும் கவலைக்கிடமான முறையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் தொழில் நுட்ப பிரிவினர் இணைந்து தடயங்கயைம், சாட்சிகளையும் சேகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

