ஏமனில் ராணுவ முகாம் தாக்குதல்: ஐ.எஸ் பொறுப்பேற்பு

364 0

201612190054407495_blast-kills-at-least-52-outside-yemen-military-camp_secvpfஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

ஏமன் நாட்டில் ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

வளைகுடா பகுதியில் அமைந்துள்ள ஏமன் நாட்டின் தென்பகுதியில் பிரபல துறைமுக நகரமான ஏடென் என்ற நகரம் ஒன்றுள்ளது, இந்நகரில் வடகிழக்கில் உள்ள கோர் மக்ஸார் மாவட்ட ராணுவ தலைமையகத்தில் சம்பளம் வாங்குவதற்காக பல வீரர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

அப்போது உடலில் வெடிகுண்டுகளை கட்டியபடி அங்கு வந்த அடையாளம் தெரியாத தற்கொலைப்படை தீவிரவாதி அதிரடி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் 30 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாகவும், பொதுமக்கள் உள்பட பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட செய்திகள் தெரிவித்து இருந்தன.

இந்நிலையில், ராணுவ தலைமையகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தற்கொலைப்படை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. இந்த கொடூர தாக்குதலுக்கு ஏமனை மையமாக கொண்டு செயல்படும் ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.