கிர்கிஸ்தான் ஜனாதிபதி இந்தியா சென்றார்

257 0

201612190240582416_kyrgyzstan-president-on-4day-visit-to-india_secvpf4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள கிர்கிஸ்தான் ஜனாதிபதி ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார்.

இந்தியாவுக்கும், கிர்கிஸ்தானுக்கும் இடையே நல்லுறவு நீடித்து வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு கிர்கிஸ்தான் நாட்டுக்கு பிரதமர் நரேந்திரமோடி சென்றார். இதைத்தொடர்ந்து அந்த நாட்டின் ஜனாதிபதி அல்மாஸ்பெக் சார்செனோவிச் ஆட்டம்பாயெவ் நேற்று டெல்லி வந்தார்.

4 நாட்கள் பயணமாக இந்தியா வந்துள்ள ஆட்டம்பாயெவ்வை, பாரம்பரிய முறைப்படி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்றார். இதையடுத்து அவர்  (செவ்வாய்க்கிழமை) உயர்மட்டக்குழுவினருடன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசுகிறார்.