அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பு!

243 0

egbldp9நடப்பாண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்க வருமானம் அதிகரித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 23 வீதம் அதிகாரித்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடத்தின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வருமானம் 959 பில்லியன் ரூபாவாக காணப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வருடம் அந்த காலப்பகுதியுனுள் அரசாங்கத்தின் வருமானம் 1180 பில்லியன் ரூபாவாக காணப்படுவதாக அந்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க திணைக்களம் ஆகிய நிறுவனங்களின் செயற்பாடுகளை அதிகரித்தமையின் காரணமாக இவ்வாறு அரசாங்க வருமானத்தை அதிகரிக்க முடிந்துள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க வருமானத்தில் அதிகமான வீதம் வரி வருமானமாக கிடைத்துள்ள நிலையில், இந்த வருடத்தின் முதல் 9 மாதத்தினுள் வரி வருமானம் 1067 பில்லியன் ரூபாய் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.அதனை கடந்த வருட காலத்தின் குறித்த காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது நூற்றுக்கு 22 வீத அதிகரிப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாங்க வருமானம் அதிகரிப்பின் முடிவாக வரவு செலவு திட்டத்தின் பற்றாக்குறை குறைந்துள்ளது.இதேவேளை, 2017ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தின் மூலம் அமைச்சு மற்றும் மாகாண சபைகளுக்கு அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள செயற்பாட்டு திட்டத்திற்கமைய நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.