வாரியாபொல, மலகனே பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் ரத்கல்ல முகாம் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது மண் ஏற்றிச் சென்று கொண்டிருந்த டிபர் வாகனம் ஒன்றும் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் டிபர் வாகனம் மேலதிக விசாரணைக்காக வாரியபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர தெரிவித்துள்ளனர்.

