தம்புள்ளை, வல்கம்வெவ பிரதேசத்தில் காட்டுயானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புள்ளை, களுந்தெவ பிரதேசத்தில் வசிக்கும் 26 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார். சடலம் பொலிஸ் பாதுகாப்புடன் அதே இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும், திடீர் மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை என்பன இன்று இடம்பெறவுள்ளன.
தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

