போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் காணிப் பிரச்சினையை ஆராய்ந்து அறிக்கையிட அரச அதிபர் உத்தரவு

321 0

6553-1-b7e76bee5d3698f2004d87f50c902e0eயாழில் கடந்த 16 வருடங்களாக தீர்க்கப்படாமல் நடைபெற்றுவரும் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகளை தலையிடாதவாறு காணி பிரச்சினை தீர்வு தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுமாறு யாழ்.மாவட்டச் அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் நல்லூர் பிரதேச செயலருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்ட நீதிமன்றில் கடந்த 16 ஆண்டுகளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவரும் காணி பிரச்சினை தொடர்பான வழக்கிற்கு விரைவில் தீர்வ வழங்குமாறு கோரிக்கையினை முன்வைத்து குடும்ப பெண் ஒருவர் நேற்று யாழ்.பொது நூலகம் முன்னால் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுடிருந்த அவர் தமது காணியானது நாச்சிமார் கோவிலடி பெரியபுலம் பாடசாலைக்கு அண்மையில் உள்ளது என்றும், அங்கே மிக நீண்ட காலமாக தாம் வசித்து வந்தது என்றும், தற்போது தமது காணிக்கு அருகில் உள்ள காணியின் உரிமையாளர் வெளிநாட்டில் இருந்து வந்து அங்கு வசித்து வரும் நிலையில் தமது காணியினையும் சேர்த்து தனது காணி என்று கூறி தங்கiளை அங்கிருந்து வெளியியேறுமாறு கோரிவருகின்றார்.
மேலும் எமது காணிக்கும் சேர்த்து பெய்யான உறுதிப்பத்திரதம் ஒன்றினையும் அவர் தயாரித்து வைத்துக் கொண்டு எங்களை அங்கிருந்து வெளியேறுமாறு கோரி வருகின்றார்.
இப் பிரச்சினை தொடர்பாக கடந்த 2001 ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கத் தாக்கல் செய்யப்பட்டது. அவ்வழக்கானது கடந்த 16 வருடங்களாக நடைபெற்று வருகின்றது. இவ்வழக்கின் தீர்ப்பினை விரைவுபடுத்துமாறு கோரி அவர் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த பெண் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கவனத்தினை ஈர்க்கும் முகமான அவருடைய புகைப்படத்தினை கைகளில் தாங்கியவாறும், தமது கோரிக்கைகளை எழுதிய பதாகையினை கைகளில் தாங்கியவாறும் அவர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
இவருடைய போராட்டம் தொடர்பில் அமைச்சு மட்டங்களினால் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அது தொடர்பான ஆராயுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
இதன்படி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நேற்று நண்பகல் வேளை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு அழைக்கப்பட்டு, அவர்களுடைய காணி பிணக்கு தொடர்பாக ஆராயப்பட்டது.
குறித்த காணி பிணக்கானது தனியார் பிரச்சினையாக உள்ளதும் அவ்வாராய்வுகளின் ஊடாக தெளிவாக இணங்காணப்பட்டது. மேலும் அது தொடர்பில் நீதிமன்ற வழக்கு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதையும் மாவட்டச் செயலகம் கவனத்தில் கொள்ளப்பட்டது.
இருப்பினும் குறித்த காணி பிணக்குத் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகளை தவிர்த்து அரசாங்கத்தினால் தீர்வு காணக் கூடிய வழிகள் எதும் உள்ளனவா என்று ஆராயுமாறு அரச அதிபர் என்.வேதநாயகன் நல்லூர் பிரதேச செயலருக்கு அறிவிறுத்தியுள்ளார்.