பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
பலாங்கொடை, எல்லேபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 09 பேர் காயமடைந்துள்ளனர்.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்து ஒன்றும், கொழும்பில் இருந்து பலங்கொடை நோக்கி ஆடை தொழிற்சாலைக்கு துணிகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்த பாரவூர்தியின் சாரதி பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பலாங்கொடை, பெட்டிகல பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பேரூந்தில் பயணித்த 09 பேர் காமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

