அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ஜாலிய விக்கிரமசூரியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, அவர் எதிர்வரும் 23 ஆம் திகதிவரை விளக்கமறியலில் தடுத்துவைக்கப்படுவார்.
அமெரிக்காவில் இலங்கை தூதுவராக செயற்பட்ட காலப்பகுதியில் தூதுவர் காரியாலயம் ஒன்றை கொள்வனவு செய்த தருணத்தில் அமெரிக்க டொலர் 3 லட்சத்து 20 ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை முறையற்றவகையில் கையாண்டதாக அவர் மீது குற்றம்சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக கடந்த நொவெம்பர் மாதம் 18 ஆம் திகதி பொலிஸ் நிதிமோசடி விசாரணை பிரிவினால் ஜாலிய விக்கிரமசூரிய கைது செய்யப்பட்டார்.

