சீனா மற்றும் சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை

391 0

2038378723ra2017ம் ஆண்டின் முற்பகுதியில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு பிரதமர்பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள செவ்வியின் போது பிரதமரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

த ஹிந்து பத்திரிகைக்கு பிரதமர் வழங்கியுள்ள செவ்வியில் தொடர்ந்தும் கூறியிருப்பதாகவது,

நான் அடுத்த வாரமளவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ள உள்ளேன்.

எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் இதன்போது கலந்து கொள்வார்கள்.

அத்துடன், நாம் இந்தியாவுடன் எட்கா உடன்படிக்கையை ஏற்படுத்திக்கொள்ள உள்ளோம். இதன் மூலம் இருநாடுகளுக்கும் பொதுவான நன்மைகள் பல உள்ளன. மீனவர்களின் பிரச்சினைகளும் கண்டிப்பாக தீர்க்கப்பட வேண்டும்.

2017ம் ஆண்டு ஆரம்ப பகுதயில் சீனாவுடனும் சிங்கப்பூருடனும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம் என்று பிரதமர் கூறியுள்ளார்.

அதேவேளை சீனாவுடனான உறவு சிறந்த முறையில் தொடரும் என்றும் கூறியுள்ளார்.

பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியமையானது இலங்கையின் ஏற்றுமதியில் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் த ஹிந்துவிற்கு வழங்கிய செவ்வியில் கூறியுள்ளார்.