வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்குமாறு கோரி முன்னாள் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதியால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

