நல்லிணக்கம் என்ற சொல் தவறாக பயன்படுகிறது – மஹிந்த

369 0
73657236
73657236

நல்லிணக்கம் என்ற சொற்பதம் தற்போது தவறாக பயன்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நல்லிணகம் நாட்டில் தற்போது அரசியல் ரீதியாக இல்லாது செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அரசாங்கத்தில் இருந்து பார்ப்பவர்களுக்கு அனைத்து விடயங்களும் தவறாக தெரிகிறது.

எனவே, எதிர்கட்சியில் இருந்து கொண்டு மக்களின் பிரச்சினைகளை ஏடுத்துரைக்க வேண்டிய நிலை தனக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாக மஹிந்த தெரிவித்துள்ளார்.