செவ்வாய் கிரகத்தில் பாரிய கோபுரங்கள்

370 0

1425722544kadail_001செவ்வாய் கிரகத்தில் ஒரே அளவான மூன்று பாரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் தொடர்பில் ஆய்வுகளை நடத்தி வருகின்ற முன்டோடெஸ்கொனோசைடோ என்ற யூரியுப் அலைவரிசை ஒன்றில் இதற்கான ஆதாரம் பதிவேற்றப்பட்டுள்ளது.

நாசாவினால் வெளியாக்கப்பட்ட செவ்வாய் கிரகத்தின் படங்களில் குறித்த ஒரே மாதிரியான கோபுரங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

இவை ஒவ்வொன்றும் தலா 4 கிலோமீற்றர் உயரமானவை என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

இவை வேற்றுக் கிரகவாசிகளின் அதி உயர் தகவல் தொடர்பாடல் கோபரங்களாக இருக்கலாம் என்று வேற்றுக் கிரகவாசிகள் தொடர்பில் ஆய்வு நடத்துகின்றவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இது தொடர்பில் நாசா இன்னும் எந்த உத்தியோகபூர்வமான அறிவிப்பையும் வெளியிடவில்லை.