மாகம்புர துறைமுகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டமையானது, இராணுவம் மீது மக்கள் வைத்திருக்கும் நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பத்தரமுல்லையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இலங்கை ஸ்திரதன்மையற்ற நாடாக மாறியுள்ளது.
ஒடுக்கு முறை, நாட்டை ஆளும் முகமாக மாறியுள்ளது.
துறைமுகத்தில் இடம்பெற்ற சம்பவத்தின் போது முதற்தடவையாக கடற்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜனாதியின் அனுமதியின்றி இராணுவத்தினர் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்.
இராணுவத்தினர் மீது மக்கள் கொண்டுள்ள நன்மதிப்பை சீர்குலைக்கும் வகையிலே இந்த செயற்பாடு அமைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

