ரத்துபஸ்வெல சம்பவம் – துப்பாக்கிகள் மீட்பு

239 0

15-1-765x510வெலிவேரிய – ரத்துபஸ்வல துப்பாக்கி பிரயோகத்திற்காக இராணுவத்தினர் பயன்படுத்திய ரி 56 ரகத்தை சேர்ந்த 40 துப்பாக்கிகள் குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்தினால் கம்பஹா நீதவான் நீதிமன்றத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான வழக்கு இன்று கம்பஹா முதன்மை நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போதே குறித்த துப்பாக்கிகள் கையளிக்கப்பட்டுள்ளன.

இன்றைய தினம் கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி அறிக்கை ஒன்றை சமர்பிக்குமாறு குற்றத்தடுப்பு விசாரணை திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான குடிநீரை கோரி ரத்துபஸ்வல கிராம மக்கள் கடந்த 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டனர்.

சம்பவத்தின் போது பாடசாலை மாணவர் உட்பட்ட மூன்று பேர் பலியாகியமை குறிப்பிடத்தக்கது.