கடற்படை தளபதி மன்னிப்பு கோர வேண்டும்!

360 0

25481அம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடற்படை தளபதி நடந்து கொண்ட விதம் மிகவும் மோசமானது என அதிகாரத்தை பகிர்ந்து ஐக்கியப்படும் அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி மற்றும் நவசமசமாஜக் கட்சியின் தலைவர் கலாநிதி. விக்ரமபாகு கருணாரட்ன ஆகியோர் இதனை கூறியுள்ளனனர்.துறைமுகத்தில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பாக கடற்படை தளபதி மன்னிப்புக் கோர வேண்டும்.

ஊடகவியலாளர் மீது நடத்திய தாக்குதல் தவறானது. கடற்படையினர் கடலில் பணியாற்ற வேண்டுமே அன்றி தரையில் அல்ல.தற்போதைய அரசாங்கத்திற்கு கடைக்கு போனவர்கள் என எம்மை இன்னும் குறிப்பிடுவதால், இவற்றிக்கு பதிலளிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.