புதிய யாப்பு சகல மக்களது விருப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும் – சம்பந்தன்

253 0

1aceddcc-1a38-477f-a166-023eeefc4d2f1மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிவதாக குறிப்பிட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அதற்குக் காரணம் மக்களுக்கிடையே சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்பட வேண்டுமென்ற அரசாங்கத்தின் கொள்கையே எனவும் வலியுறுத்தியுள்ளார்.
திருகோணமலை – சம்பூர் – நாவலடி பிரதான வீதியின் திருத்தப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அதனை பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச்சந்தியில் நேற்று நடைபெற்றது இந்நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் விரைவில் புதிய யாப்பு நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படும் என்பதுடன் அது அனைத்து மக்களது அபிலாஷைகள், பிரச்சினைகள் மற்றும் எதிர்ப்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் அமையுமெனவும் குறிப்பாக ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் முலம் சகல மக்களது விருப்புடன் அது நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நீண்டகால யுத்தத்தின் பின்னர் நிறைவடைந்துள்ளதோடு, தேசிய அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதாகவும், இரண்டு பிரதான கட்சிகளும் அங்கம் வகிக்கின்ற நிலையில் இதற்குள் சிறு சிறு குழப்பங்களை ஏற்படுத்த எவரும் முயற்சிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எந்தவொரு அரசியல் யாப்பும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டவில்லை எனவும் ஆகவே, புதிய யாப்பு சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சம்பூர் அனல் மின்நிலையத்திற்கு ஒதுக்கிய 500 ஏக்கர் காணி மற்றும் அதற்கான நிலக்கரி கொண்டு செல்லவென பாதைகளுக்காக எடுக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டிய இரா.சம்பந்தன் இதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ள விடயத்தையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் அந்த காணி விடுவிக்கப்படும் முற்றாக விடுவிக்கப்பட்டால் மக்களின் பிரச்சினைகள் தீரும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 30 வருடங்களாக நடைபெற்ற யுத்தத்தால்இ இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டதோடுஇ வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் இதுவரை முழுமைப்பெறவில்லை எனவும் இரா.சம்பந்தன் குற்றம்சாட்டியுள்ளார்.