ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு மஹிந்த ராஜபக்சவே காரணம் – அர்ஜுன ரணதுங்க

292 0

arjuna-ranathunga-02ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே காரணம் என்று துறைமுக அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க குற்றம் சாட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், துறைமுக ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பாக அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு கொழும்பிலுள்ள துறைமுக அபிவிருத்தி அமைச்சில் நேற்றையதினம் நடைபெற்றபோது, தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜீன ரணதுங்க,

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற ஊழியர்கள் அனைவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டவர்கள்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப்படையில் இருந்தவர்கள். ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஊழியர்கள் மதுபோதையிலேயே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

“துறைமுகத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களை நீக்கினால் எனது அமைச்சுப் பதவியை துறப்பேன் என்றே நான் கூறியுள்ளேன். எனினும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்கு துறைமுகத்தின் பகுதியை சீனாவிற்கு கொடுப்பதில் எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் மஹிந்த hரஜபக்சவின் குழுவினரே பிரச்சினையை ஏற்படுத்துகின்றனர். குறித்த ஊழியர்களில் 50 வீதமானவர்கள் நீலப்படையைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் கடந்த தேர்தல்களில் பயன்படுத்தப்பட்டவர்கள். இதனை மாற்ற முடியாது. எனினும் நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்குவந்த பின்னர் அவர்கள் மஹிந்த குழுவா, நீலப்படையா அல்லது நாமல் பபாவிற்கு உரித்தானவர்களா எனப் பார்க்கவில்லை. சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதியாக தெரிவாகியதால் அவர்களது தொழில் பாதுகாக்கப்பட்டது. அதன் பெறுமதி அவர்களுக்கு விளங்குவதில்லை. ஏனென்றால் இன்னும் அவர்களை குறித்த குழுவினரே பயன்படுத்திவருகின்றனர்.

“துறைமுகத்தின் பகுதியை சீனாவிற்கு வழங்குவதற்கு மஹிந்த ராஜபக்சவும் அவரது சகாக்களும் ஒருபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மஹிந்த ராஜபக்ச சீனாவுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் கலந்துரையாடினார். ஏன்ன பேசினார், எப்படி பணம் வரும் என்பது பற்றி எனக்குத் தெரியாது. எனினும் இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு முடிந்தால் சீனா மேர்சன்ட் நிறுவனத்திற்கு கூற முடியுமா? அவரால் கூற முடியாது. ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க 1.3 பில்லியன் டொலர் செலவிடப்பட்டதாக கூறுகின்றனர். என்னிடம் அதனை வழங்கியிருந்தால் 750 மில்லியன் டொலர்களுக்கு நிர்மாணித்துக் கொடுப்பேன்.

நான் அன்று துறைமுகத்திற்கு சென்றபோது ஊழியர்களில் பலர் மதுபோதையில் இருந்தனர். இன்னும் ஒரு வாரத்தில் துறைமுக செயற்பாடுகளை ஆரம்பிப்போம். அவர்கள் விருப்பம் இல்லாவிட்டாலும் ஹம்பாந்தோட்டையில் பலர் அங்கு வந்து தொழில்செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்” என்று மேலும் தெரிவித்தார்.