என்னைக் குற்றவாளி என நிரூபித்தால் நான் பதவி விலகுவேன்!

267 0

1325403292rc5அம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையில் தான் குற்றவாளி என இனங்காணப்பட்டால் பதவி விலகுவதாக சிறீலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன தெரிவித்துள்ளார்.

தாம் ஓர் அரசியல்வாதி அல்ல என்று தெரிவித்துள்ள கடற்படைத் தளபதி, சிறீலங்காவிற்கு வருகின்ற கப்பல்களுக்கான பொறுப்புக்களை ஏற்பதற்கான கடப்பாடு தனக்கு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அம்பாந்தோட்டைத் துறைமுக ஊழியர்கள் 400 இற்கும் மேற்பட்டோர் கடந்த 7ஆம் திகதியிலிருந்து தமக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறும், சீன முதலீடுகளை எதிர்த்தும் போராட்டம் நடாத்தி வருகின்றனர். அத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜப்பானியக் கப்பலொன்றையும் பணயமாகப் பிடித்துவைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கடந்த சனிக்கிழமையன்று போராட்டம் இடம்பெறும் பகுதிக்கு ஆயுதம் தரித்த கடற்படை சிப்பாய்களுடன் சிவில் உடையில் வந்த கடற்படைத் தளபதி, அங்குள்ள ஊழியர்களுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டதோடு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய காணொளி வெளியாகியதை அடுத்து பெரும் விமர்சனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதனையடுத்து பாதுகாப்புச் செயலர் கருணாசேன கெட்டியாராச்சி இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடாத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்த்தன,

ஊடகங்கள் வெளியிடாத சில காணொகள் தன்னிடம் இருப்பதாகவும், விசாரணைகளின்போது அவற்றை சமர்பிக்கவிருப்பதாகவும் கொழும்பிலிருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கடற்படைத் தளபதி தெரிவித்துள்ளார்.

“அம்பாந்தோட்டையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பல்களை விடுவிக்குமாறு பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்ற ஊழியர்களுக்கு ஏற்கனவே ஓர் அறிவித்தல் வழங்கப்பட்டது. எனினும் அந்த அறிவிப்பை அவர்கள் புறக்கணித்தனர்.

கப்பல்களை விடுவித்தால் தற்கொலை செய்துகொள்வதாக ஊழியர்கள் கூறியதாக ஊடகங்கள் மூலமாக அறிந்துகொண்டேன். அதனையடுத்தே குறித்த பகுதிக்கு கடற்படை சென்றது. அந்த இடத்தில் எனக்கு அரசியல் இருக்கவில்லை. நான் கட்டளைகளைப் பின்பற்றுபவன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிகாலத்தில் எஸ்.பி.எஸ் உருவாக்கியதோடு முன்னைய ஆட்சியில் யுத்தத்தை வென்றுகொள்ள பங்களிப்பு செய்தேன். இப்போது புதிய அரசாங்கம். தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஊடகவியலாளர் வழக்கு தொடர்ந்தால் அதனை எதிர்கொள்ளவும் நான் தயார்.

ஊடகங்களில் வெளியான காணொளிகளை விடவும் என் சார்பான காணொளிகள் என்னிடம் உள்ளன. ஊடகங்கள் வெளியிடுகின்ற காணொளிகளுக்கு உடனடி பதில் வழங்க எனக்கு அவசரம் இல்லை. புதன்கிழமை முதல் விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணைகளில் நான் சாட்சியமளிப்பேன்”