குமார் குணரத்தினத்தின் விண்ணப்பம் பரிசீலிக்கப்படுகிறது

411 0

kumar-gunaratnam-415x260முன்னிலை சோசலிச கட்சியின் அரசியல்சபை உறுப்பினர் குமார் குணரத்தினத்தின் குடியுரிமை விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு வருவதாக இலங்கை குடிவரவு குடியகழ்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் கட்டுப்பாட்டாளர் நிஹால் ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

ஒஸ்ட்ரேலியாவின் பிரஜையான குமார் குணரத்னம், இலங்கையின் குடிவரவு சட்டத்தை மீறி தங்கி இருந்தமைக்காக கைது செய்யப்பட்டு ஒருவருட சிறைவைப்பின் பின்னர் கடந்த 2ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.

அத்துடன் 3 மாத காலத்துக்கு இலங்கையில் தங்கி இருக்க தற்காலிக வீசாவும் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது தமது ஒஸ்ட்ரேலிய குடியுரிமையை ரத்து செய்து, இலங்கைக் குடியுரிமைப் பெற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக, குமார் குணரத்தினம் குடிவரவு குடியகழ்வு திணைக்களத்திடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அவரது குடிவரவு விண்ணப்பம் பரிசீலிக்கப்படுவதாக குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.