திலின கமகேவிற்கு எதிரான வழக்கு விசாரணைகளுக்கு நாள் குறிப்பு

306 0
அனுமதி பத்திரமின்றி யானை குட்டியொன்றை பராமரித்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள நீதவான் திலின கமகே உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கினை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும் மார்ச் மாதம் 24 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று (01) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் அழைக்கப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 13 அம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த நிலையில், அன்றைய தினம் புதுக்கடை மேல் நீதிமன்ற பிரதேசத்தில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கவில்லை.

அதன்படி, வழக்கின் மேலதிக விசாரணையை மார்ச் மாதம் 24 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க மேல் நீதிமன்ற நீதிபதி இன்று உத்தரவிட்டார்.