நெல்லையில் போக்குவரத்துக்கு தகுதியற்றதாக மாறியுள்ள சாலைகள்

286 0

திருநெல்வேலியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் மாநகரப் பகுதியில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து புழுதி மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

திருநெல்வேலி மாநகரில் நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான சாலைகளாகட்டும், மாநகராட்சி கட்டுப்பாட்டிலுள்ள சாலைகளாகட்டும் பாதாள சாக்கடை குழிகளையொட்டி உடைப்புகள், குண்டு, குழிகள் இல்லாமல் எந்த சாலையும் இல்லை.